நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம்? அசத்தும் விஞ்ஞானிகள்
நிலவில் உருளைக்கிழங்குகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட சீனா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்வது குறித்து சீனா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் சாங் கிங் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜி ஜெங்ஜின் இது குறித்து கூறுகையில், அடுத்த ஆண்டு சாங்ஜி 4 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பூமியில் நிலவுவது போன்ற சூழல் கொண்ட ஒரு சிறிய பெட்டகத்துக்குள் உருளைக்கிழங்குகள் அடைக்கப்படும்.
பூமியின் துணைக்கோளான நிலவின் மேற்பரப்பில் உள்ள சிறிய சிலிண்டருக்குள் சில பட்டுப்பூச்சி லார்வாக்களும் அடைக்கப்படும் என ஜெங்ஜின் கூறியுள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் பூச்சிகள் அல்லது கிழங்குகள் தாக்குப்பிடிக்குமா என்பதைக் கண்டறிவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிகிறது.
இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த சில முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ல் வெளியான மார்ஷியன் என்ற அறிவியல் கற்பனை திரைப்படத்தில் விண்வெளி வீரர் ஒருவர் செவ்வாய் கிரகத்தில் வாழ உருளைக்கிழங்குகளைப் பயிரிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment