ஒரே உடல் எடையை கொண்டவர்கள்.. திசையை பொறுத்து மாறுபடுவது ஏன்?

ஒரே விதமான தோற்றம் மற்றும் உடல் எடையை கொண்ட இருவர்கள், எதிர் எதிர்த் திசையில் ஒரே வேகத்தில் நடக்கும் போது, அந்த இருவர்களின் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
திசையை பொறுத்து உடல் எடை மாறுபடுவது ஏன்?
ஒரே உடல் எடையை கொண்ட இருவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு போன்ற எதிரெதிர் திசையை நோக்கி நடந்து வந்தால், அவர்களில் மேற்குத் திசையை நோக்கி நடப்பவரின் எடை அதிகமாக இருக்கும்.
ஏனெனில் பூமியின் சுழற்சிக்கு எதிர்த் திசையில் நடப்பவர் மீது அதிக அழுத்தம் செயல்படுவதால், மேற்கு நோக்கி நடப்பவரின் எடை, கிழக்கு நோக்கி நடப்பவரின் எடையை விட அதிகமாக இருக்கும்.
அதுவே பூமியின் சுழற்சி திசையில் ஒருவர் நடக்கும் போது தன்னுடைய செயல் ஆற்றல் முழுவதையுமே அவர் இழந்து விடுவதால், எதிர் திசையில் நடப்பவரை விட, அவருக்கு உடல் எடை குறைவாக இருக்கும்.
மேற்குத் திசையிலிருந்து, கிழக்கு நோக்கிப் பயணிக்கும் ஒருவர் புவி வட்டப் பாதையின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
பூமியின் திசைவேகத்தோடு, நடப்பவரின் திசைவேகமும் சேர்ந்துக் கொள்கிறது. பூமியின் பயணத் திசையில் நடப்பவர் இழுத்துச் செல்லப்படுகிறார்.
இதற்கு நேர் மாறாகக் கிழக்கிலிருந்து மேற்காக நடப்பவர் எதிர் திசையில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
எதிர் திசையில் பயணம் செய்பவர் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது எடையும் அதிகரிக்கும்.
ஒரே மாதிரியான வடிவமும் எடையும் கொண்டு எதிர் எதிர்த் திசையில் செல்லும் பேருந்துகள், லாரிகள், ரயில்கள் ஆகியவற்றின் எடைகள் கூட, பூமியின் சுழற்சி மற்றும் திசைவேகத்தைப் பொறுத்து இவைகளும் மாறுபடுகிறது.
ஒரே எடை, உருவம், தோற்றம் ஆகியவை கொண்ட இருவர்கள் எதிர் எதிர்த் திசையில் 8 கி.மீ கிழக்கு மற்றும் மேற்கு திசையை நோக்கி நடக்கும் போது, அவர்களில் மேற்கிலிருந்து கிழக்காக நடப்பவரை விட, கிழக்கிலிருந்து மேற்காக நடப்பவரின் எடை 2 கிராம் அதிகமாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்