தானாகவே வீடியோக்களை எடிட் செய்யும் புதிய மென்பொருள்!

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் கமெராக்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகின்றது.
எனினும் கைப்பேசிகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை எடிட் செய்வதற்கு பிரத்தியேக மென்பொருட்கள் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறான மென்பொருட்களை பயன்படுத்தும்போது பல மணி நேரங்களை செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
இப் பிரச்சினைக்கு தீர்வாக தானாகவே வீடியோக்களை எடிட் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
MovieSlice எனும் இந்த மென்பொருளானது வீடியோ பதிவின்போதே நீக்க வேண்டிய பகுதிகளை அடையாளப்படுத்தி விடுகின்றது.
உதாரணமாக உணவு தயாரித்தலுக்கான செய்முறையை பதிவு செய்யும்போது குரலில் ஏற்படும் தடுமாற்றம், தாமதம் என்பவற்றினை அடையாளப்படுத்திக்கொள்ளும்.
பின்னர் அவற்றினை இலகுவாக நீக்கிவிட முடியும். அதுமட்டுமல்லாது எடிட் செய்யப்பட்ட பின்னர் வீடியோ கோப்பாக மாற்றுவதற்கு ஏனைய மென்பொருட்களை விடவும் 50 மடங்கு வேகமாக செயற்படக்கூடியது.
இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இம்மென்பொருளினை மொபைல் சாதனங்கள் மற்றும் கணனிகள் என்பவற்றிலும் பயன்படுத்த முடியும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்