சிக்காக்கோவில் பிரம்மாண்டமாக அமையும் ஆப்பிள் ஸ்டோர்!
ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் ஸ்டோர் ஒன்றிணை சிக்காக்கோ நகரில் நிர்மாணித்து வருகின்றது.
இக் கட்டிடத்தின் மேற்பகுதியில் தனது MacBook Pro தோற்றத்தில் பிரம்மாண்டமான லேப்டொப் ஒன்றிணையும் வடிவமைத்துள்ளது.
உலோகத்தினால் ஆக்கப்பட்ட கூரையின் மேற்பகுதியிலேயே இந்த லேப்டொப் வடிவம் காணப்படுவதுடன், ஆப்பிள் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
இரு தட்டுக்களைக் கொண்ட கட்டிடமாக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த ஆப்பிள் ஸ்டோரானது மொத்தமாக 20,000 சதுர அடிகளை உடையது.
இதேவேளை இக் கட்டிடப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்பது உட்பட ஏனைய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அடுத்து வரும் வாரங்களில் புதிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment