ஆப்பிள் கணனிகளை மல்வேர் தாக்கும் வேகம் அபரிமிதமாக அதிகரிப்பு!

ஆப்பிள் கணனிகளில் Mac OS எனும் பிரத்தியேக இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த இயங்குதளத்தில் வைரஸ் மற்றும் மல்வேர் தாக்கங்கள் இல்லை என்பதே அதிகளவானவர்களின் நம்பிக்கை ஆகும்.
ஆனால் ஒப்பீட்டளவில் ஏனைய இங்குதளங்களைக் காட்டிலும் குறைவாகவே காணப்பட்டு வந்தது.
தற்போது இதன் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது.
Mac OS சாதனங்களில் மல்வேர் தாக்கம் தொடர்பான ஒரு புள்ளி விபரத்தினை McAfee நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரமானது 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இருக்கின்றது.
இதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 100,000 இற்கும் குறைவான மல்வேர் தாக்கங்களே காணப்பட்டுள்ளது.
ஆனால் 2017 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுப் பகுதியில் சுமார் 700,000 வரையான மல்வேர் தாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வரைபடைத்தினையும் கீழே காணலாம்.
இதேவேளை அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த மல்வேர் தாக்கமானது மேலும் பன்மடங்கு அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்