தானியங்கி கார் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கும் இரு நிறுவனங்கள்!
சாரதி இன்றி தானாகவே பயணிக்கக்கூடிய கார்களை வடிவமைப்பதில் சில கார் உற்பத்தி நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்காக வேறு சில தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுகின்றன.இதேபோன்று ஸ்வீடனை தளமாகக் கொண்ட கார் வடிவமைப்பு நிறுவனமான Volvo ஆனது கலிபோர்னியாவில் உள்ள Nvidia எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
குறித்த காரிற்கான வன்பொருட்களை Volvo நிறுவனமும், மென்பொருட் பாகங்களை Nvidia நிறுவனமும் வடிவமைக்கவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது தானியங்கி காரினை அறிமுகம் செய்வதற்கு Volvo நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எனினும் கூகுள் உட்பட வேறு சில நிறுவனங்கள் தமது தானியங்கி காரினை பரிசீலிப்பிலும் ஈடுபடுத்திவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment