புதிய வசதிகள், புதிய வடிவம் என கலக்கும் ஸ்கைப்பின் புதிய அப்பிளிக்கேஷன்

இணையவழி தொடர்பாடலில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது.
அந்த அளவிற்கு உலகப் பிரபல்யம் பெற்ற சேவையாக திகழ்கின்றது.
இதனை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.
தற்போது iOS சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பானது முற்றிலும் புதிய தோற்றத்தினைக் கொண்டதாக காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி சில புதிய வசதிகளையும் கொண்டுள்ளது.
அதில் ஒன்று In-Call Reactions வசதியாகும். இதன் ஊடாக அழைப்பில் இருக்கும்போதே லைவ் ஈமோஜிக்கள், லைவ் டெக்ஸ்ட், ரியல் டைம் போட்டோஸ் என்பவற்றினை பயன்படுத்த முடியும்.
மற்றைய வசதியாக Message Reactions காணப்படுகின்றது. இதன் ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்பும்போது Expressive Reactions - களைப் பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்.
அத்துடன் அன்றாட நடவடிக்கைகளை ஹைலைட் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இப் புதிய பதிப்பினை ஐடியூன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்