புதிய வரலாறு படைத்து அசத்தியது யூடியூப்!

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் இணைய சேவைகளுள் ஒன்றாக யூடியூப் காணப்படுகின்றது.
இது வீடியோக்களை பகிரும் தளங்களுள் முதல்வனாக திகழ்ந்து வருகின்றது.
இத் தளமானது தற்போது புதிய சரித்திரம் ஒன்றினைப் படைத்துள்ளது.
மாதாந்தம் சுமார் 1.5 பில்லியன் வரையான பயனர்கள் யூடியூப் தளத்தினை லாக்கின் செய்கின்றார்கள் என்பதே அதுவாகும்.
இந்த தகவலை VidCon மற்றும் Google நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
யூடியூப் தளத்தில் கணக்கை உருவாக்கியவர்களுள் 1.5 பில்லியன் வரையானவர்கள் மாதம் தோறும் பயன்படுத்தி வருவதையே இந்த தகவல் சுட்டிக்காட்டுக்கின்றது.
ஆனால் ஒட்டுமொத்தமாக யூடியூப் தளத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இதை விடவும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்