வாட்ஸ் ஆப்பினூடாக கோப்புக்களை பகிரும் வசதியில் அதிரடி மாற்றம்!

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் சிறந்த சட்டிங், வீடியோ அழைப்பு மற்றும் கோப்பு பகிரும் வசதியை வாட்ஸ் ஆப் வழங்கி வருகின்றது.
பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப்பின் உடாக இதுவரை சில வகையான கோப்புக்களை மட்டுமே பகிரக்கூடியதாக இருந்தது.
அதாவது வீடியோ, படங்கள், PDF, SpreadSheet, Word Document போன்ற கோப்புக்களை மட்டுமே பகிரக்கூடியதாக இருந்தது.
ஆனால் இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் எந்தவொரு கோப்பு வகையினையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் கோப்பின் கொள்ளளவு வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வரையறையானது iOS சாதனங்களில் 128 MB ஆகவும், Android சாதனங்களில் 100 MB ஆகவும் காணப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்