வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? பரபரப்பை கிளப்பிய அனானிமஸ் குரூப்பின் வீடியோ
வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்களா என்ற கேள்விக்கு விடைகிடைத்தபாடில்லை. அவ்வப்போது பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் குறித்த வீடியோக்கள் வெளியாகும்.
இந்நிலையில் அனானிமஸ் குரூப் ஒன்று வேற்றுகிரகவாசிகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி வரும் நாசா வேற்றுகிரகவாசிகள் இருப்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் நாசா விஞ்ஞானி ஒருவரின் கருத்துகளையும் மேற்கோள்காட்டியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ள இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடும் திட்டமில்லை என நாசா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment