Microsoft Cortana தரும் புத்தம் புதிய வசதி!
மென்பொருள் வடிவமைப்பில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட்டினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மென்பொருளே Cortana ஆகும்.
இந்த மென்பொருள் ஆனது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகின்றது.
தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு குரல் வழி கட்டளைகள் ஊடாக மென்பொருட்களை செயற்படுத்துதல், சொற்களை வேகமாக உணர்ந்து தட்டச்சு செய்தல் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன.
எனினும் இவ் வசதிகளை Office Apps இல் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை Cortana தொழில்நுட்ப வசதியினை பயனர்களுக்கு வழங்குவதற்காக 40 நாடுகளில் 1,500 வரையானவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன் இம் மென்பொருள் 20 மொழிகளில் செயற்படக்கூடியதாகவும், 60 வகையான மொழிகளுக்கு உடனடி மொழிமாற்றம் செய்யக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

Comments
Post a Comment