Uptime அப்பிளிக்கேஷனின் பீட்டா வெர்ஷன் வெளியானது

கூகுள் நிறுவனம் தன்னை இணைய உலகில் ஒரு உச்ச நிலையில் நிலைநிறுத்தியுள்ளது.
இதனால் பல விஷப்பரீட்சைகளில் அசால்டாக இறங்கி வெற்றிவாகை சூடியுள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக யூடியூப்பிற்கான Uptime அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பில் வீடியோக்களை ஒருவர் பார்த்த பின்னர் அதனை ஷேர் செய்து நண்பர்களையும் பார்க்கச் செய்ய முடியும்.
அத்துடன் அவர்களின் கொமெண்ட்களை கேட்கவும் முடியும். ஆனால் இதனைச் செய்வதற்கு குறித்த அளவு நேரம் எடுக்கும்.
இதனை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அப்பிளிக்கேஷனே Uptime ஆகும்.
இதன் ஊடாக அனைத்து நண்பர்களும் ஒரே நேரத்தில் குறித்த ஒரு வீடியோவை தமது மொபைல் சாதனங்கள் ஊடாக பார்த்து மகிழ முடியும்.
அத்துடன் உடனுக்கு உடன் அவர்களின் அபிப்பிராயங்களையும் கொமெண்ட் ஊடாக கேட்க முடியும்.
இந்த அப்பிளிக்கேஷன் முதன் முதல் டெவலப்பர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் பீட்டா பதிப்பினை அனைத்து பயனர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் iOS சாதனங்களில் தற்போது பயன்படுத்த முடியும். Android சாதனங்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்