இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றை தடுக்க வேண்டுமானால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழாமல் இல்லை. இந்நிலையில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த சித்தார்த் என்ற 17 வயது மாணவன் மின்காலனி ஒன்றை தயார் செய்துள்ளார். மின் அழுத்த விளைவின் மூலம் இதை உருவாக்கியுள்ளதாக கூறும் சித்தார்த், Circuit Board மற்றும் Rechargeable Battery ஒன்றை இணைத்துள்ளார். ஆபத்தான சூழலில் இருக்கும் போது 0.1 ampere செலுத்துவதன் மூலம் பொலிசார் மற்றும் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும். இதை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும், தன்னுடைய தாயின் உந்துதலே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
கற்பழிப்பு என்பது ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் (பொதுவாய் ஆண்கள்) இன்னொருவரின் (பொதுவாய்ப் பெண்) சம்மதமின்றி வன்முறையாய்க் கட்டாயக் கலவியில் ஈடுபடுதலாகும். இதுவொரு பிற்போக்கான , ஆணாதிக்கச் சொல்லாடல் என்பதால் "பாலியல் வல்லுறவு"என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. கிமு 1780ல் பாபிலோனியாவின் ஹம்முராபி சட்டங்களில் கன்னிப் பெண்ணைக் கற்பழிப்பது அவளின் தந்தைக்கு நேரும் சொத்துச் சேதமாகச் சொல்லப்படுகிறது. திருமணமான பெண் கற்பழிக்கப்பட்டால் அவள் நடத்தை கெட்டவள் என சொல்லி ஆற்றில் வீசி எறிந்திருக்கிறார்கள். பின் மோஸைக் சட்டத்தில் ஒரு கன்னிப்பெண் கற்பழிக்கப்பட்டால் அவளது தந்தை அல்லது சகோதரர்களில் எவரேனும் தவறு செய்தவனின் குடும்பப்பெண்களில் ஒருவரை கற்பழித்துக் கொள்ளலாம் என்கிறது. ஹீப்ரூ சட்டம் ஒரு கன்னிப்பெண் நகரத்துக்குள் கற்பழிக்கப்பட்டால் அவளையும், கற்பழித்தவனையும் கல்லால் அடித்துக் கொல்லச் சொல்கிறது. நகர எல்லைக்குள் அவள் கத்தி ஊரைக்கூட்டி அதிலிருந்து தப்பியிருக்கமுடியும் என்பதால் அந்நிகழ்வு அவள் சம்மதத்தின் பேரில் நடைபெற்றிருக்கும் என்ற அடிப்படையில் அவளுக்கும் சேர்த்து தண்டனை தரப்பட்டது....
லண்டனில் தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் மிகவும் சிறிய அளவிலான எடை குறைந்த ரோபோ கண்டறியப்பட்டுள்ளது. தேளின் விஷத்தில் மருத்துவக்குணம் இருப்பது கண்டறியப்பட்டு உயிர்காக்கும் மருந்துக்களில் கலக்கப்படுகிறது. தற்போது தேள்களிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். எடை குறைவான சிறிய அளவிலான இந்த ரோபோ விரைவாகவும், பாதுகாப்பாகவும் விஷத்தை பிரித்து எடுக்கின்றன.
Comments
Post a Comment