ஆப்பிள் நிறுவனத்தின் Apple Pay சேவைக்கு மேலும் பல வங்கிகள் அங்கீகாரம்!
ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் ஏட்டிக்கு போட்டியாக பல வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
இவ்வாறு அண்மையில் அறிமுகம் செய்த சேவையை Apple Pay மற்றும் Samsung Pay ஆகும்.
பல்வேறு நாடுகளிலும் இவ் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பயனர்களின் வரவேற்பினை கருத்திற்கொண்டு மேலும் பல வங்கிகள் இவ் வசதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதற்கு ஆதாரமாக தற்போது Apple Pay வசதியுடன் இணைந்து செயலாற்ற அமெரிக்காவில் மேலும் 21 வங்கிகள் முன்வந்துள்ளமையை சுட்டிக்காட்டலாம்.
அவ் வங்கிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- American Eagle Financial Credit Union
- Central Virginia Federal Credit Union
- Community Bank & Trust of Florida
- Community Savings Bank
- First Bank of Berne
- First Financial Federal Credit Union
- Fremont Federal Credit Union
- Greater State Bank
- Highlands State Bank
- Houston Police Credit Union
- Independent Bank (both MI and TX now)
- Mid-Hudson Valley Federal Credit Union
- NAFT Federal Credit Union
- Peoples Bank of East Tennessee
- Santa Cruz County Bank
- Skyline National Bank
- Sterling Bank
- Stonegate Bank
- Terre Haute Savings Bank
- The Cooperative Bank of Cape Cod
- The First National Bank of Central Texas
இதேவேளை ஆப்பிள் நிறுவனம் iOS 11 இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்யும்போது Apple Pay வசதியில் மேலும் புதிய அம்சங்களை உள்ளடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Post a Comment