இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இந்தப்படத்தை பற்றி எழுதவேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் எழுதுவதற்கான அவகாசம் இதுவரை கிடைக்கவில்லை. படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையுடையவர்கள் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்க வேண்டிய ஒரு படம் இந்தப்படம் என்பது எனது தனிப்பட்ட எண்ணம்.
இயக்குனர் கோகுலும் சரி, வசனம் எழுதிய மதன் கார்க்கியும் சரி இந்தப் படத்திற்கு ஒரு ப்ளேவர் சேர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டம். ஒரு சினிமாவை அல்லது தன் மனதில் வைத்திருக்கும் கதைக்கு எப்படியான திரைக்கதை எழுதலாம் என்பதை இந்த படத்தில் நிச்சயம் படிக்கலாம். என்னைக்கேட்டால் விஸ்காம் ஸ்டூடன்ட்ஸ் இந்தப் படத்தையும் பாடத்தில் சேர்த்தால் நல்லது.
Anti liquor சப்ஜெக்ட்டை கடைசி வரை எதைப்பற்றிய படம் என்பது தெரியாமல் எடுத்தது, ஏனோ தானோ என்று ஹீரோயினை ஹீரோயிஸத்தால் இம்ப்ரஸ் பண்ண முயற்சிக்கும் தமிழ்ப்பட கலாசாரத்தில் அந்த சுமார் மூஞ்சி குமாரு கதாப்பாத்திர வடிவமைப்பு, அண்ணாச்சி கதாப்பாத்திரத்தின் சலிப்பில்லாத எடிட்டிங், ஒரு காட்சி சலிப்புத்தட்ட ஆரம்பிக்கையில் மற்றைய கதைக்கு தாவல் என்று இந்தப்படம் சினிமா அறிவுக்கு தீனி என்றால் அது மிகையாகாது.
அண்ணாச்சியின் அடியை வாங்கிக்கொண்டு "என் புதுக்கண்ணாடிய குட்றா" என்று விஜய் சேதுபதி கேட்பது போன்ற எதார்த்தமான வசனங்கள் தான் படத்தை ஒரு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. எத்தனை தடவை பார்த்துவிட்டேன் என்பது நினைவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் இந்தப்படம் சலிப்பதில்லை என்பது மட்டும் உண்மை.
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
Credit Rimaz Ahamed

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்