அமேஷான் தளத்தையும் விட்டுவைக்காத ரான்ஸம்வேர்: பயனர்களே எச்சரிக்கை!
சில சமயங்களில் பாரிய தாக்குதலுக்கும் முகம் கொடுக்க நேரிடும்.
அவ்வாறான நிலை அண்மையில் பல நாடுகளில் ஏற்பட்டிருந்தது.
அதாவது ரான்ஸம்வேர் எனும் வைரஸ் தாக்கத்திற்கு தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் நாடுகள் கூட திணறவேண்டியிருந்தது.

இவ் வைரஸின் தாக்கமானது தற்போது குறைவடைந்துள்ளது போதிலும் முற்றாக நின்றபாடில்லை.
தற்போது பிரம்மாண்ட ஒன்லைன் சந்தையாகத் திகழும் அமேஷான் தளத்தினையும் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக அத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்து பொருட்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த தாக்கம் நேரடியாக அமேஷானை தாக்கவில்லை.
புகைப்படங்களை பகிரும் தளமான Photobucket தளத்தினை தாக்கியதாலேயே இவ்வாறு சில புகைப்படங்கள் அமேஷான் தளத்தில் மறைக்கப்பட்டுள்ளன.

Comments
Post a Comment