பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வார சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தனியார் தொலைக்காட்சியி நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் தற்போது சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக்காக வலம் வருகின்றது.
மேலும், அந்த நிகழ்ச்சி குறித்த மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் தெறிக்கவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.
15 பேரை 3 பிரிவாக பிரித்து சம்பளம் கொடுக்கிறார்களாம்.
நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோருக்கு வாரம் ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளமாம்.
சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம்.பரணி, ஜுலியானா, ஆரார், ரைசா போன்றோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment