இரண்டாவது பிரம்மாண்டமான டேட்டா சென்டரை நிறுவும் ஆப்பிள்!
உலகத்தரம் வாய்ந்த கணனி மற்றும் மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் மேலும் சில சேவைகளையும் வழங்கி வருகின்றது.
கிளவுட் ஸ்டோரேஜ் சேவை உட்பட தனி நபர் தரவுகளை கையாளும் சேவைகளை தனது சொந்த டேட்டா சென்டரிலேயே சேமித்து வருகின்றது.
அதிகரித்து வரும் பயனர்களின் எண்ணிக்கை காரணமாக தற்போது மற்றுமொரு பிரம்மாண்ட டேட்டா சென்டரை திறக்க முடிவு செய்துள்ளது.
இந்த டேட்டா சென்டர் டென்மார்க்கில் அமைக்கப்படவுள்ளதுடன் இதன் சேவைகள் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக 921 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த டேட்டா சென்டர் முற்று முழுதாக மீளப் புதுப்பிக்கக்கூடிய மின்சக்தியில் இயங்கவுள்ளது.

Comments
Post a Comment