பயனர்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் விடுக்கும் அவசர வேண்டுகோள்!
மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை தமது கணனியில் பயன்படுத்தி வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளது.அதாவது குறித்த இயங்குதளம் உட்பட மென்பொருட்களை உடனடியாக அப்டேட் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
இவ்வாறு செய்வதனால் இயங்குதளம் மற்றும் மென்பொருட்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும்.
அதுமட்டுமல்லாது பாதுகாப்பு குறைபாடுகளையும் இல்லாது செய்ய முடியும் எனவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரிஜினல் இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்கள் இதனை அவசியம் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள 1507 பதிப்பானது விரைவில் அதற்கான உதவிகளை இழக்கப்போகின்றது எனவும் மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment