மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
இந்த நிறுவனம் உலகெங்கிலும் 121,000 பணியாளர்களினைக் கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது.
இதன்படி ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளது.
எனினும் அமெரிக்காவை தவிர ஏனைய நாட்டில் பணிபுரிபவர்களையே இவ்வாறு இடைநிறுத்தம் செய்யவுள்ளது.
தற்போது கிளவுட் கொம்பியூட்டிங் ஆனது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதனால் அதன் மூலம் அதிகளவு வருமானம் ஈட்ட முடியும் என மைக்ரோசொப்ட் எண்ணியுள்ளது.
இதன் காரணமாகவே பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கிளவுட் முறையிலான சேவையினை மக்களுக்கு வழங்கவுள்ளது.
இதேவேளை எந்தெந்த நாடுகளில் உள்ள பணியாளர்கள் இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Post a Comment