செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக குழந்தைகள் கடத்தலா? விளக்கமளித்த நாசா
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து நாசா, பல ஆண்டுகளாகவே ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்காக கடந்த 2012ம் ஆண்டு அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி என்ற விண்கலம் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து அனுப்புகிறது.
இந்நிலையில் குழந்தைகளை கடத்தி செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் விஞ்ஞானி ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு விளக்கமளித்துள்ள நாசா, பூமியில் இருந்து 33.9 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாயின் தட்பவெப்பநிலையில் மனிதர்கள் வாழ முடியாது.
எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பற்றிய வதந்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளது.
மேலும், செவ்வாயில் மனிதர்கள் இல்லை எனவும், ஆராய்ச்சிக்காக சில ரோவர்கள் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment