கணவன் வீட்டில் கொடுமை: பிக்பாஸ் பெண் போட்டியாளர் வழக்கு
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் தன்னை தனது கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.மும்பையை சேர்ந்த மண்டானா குப்தா என்பவர் பிரபல தெலைக்காட்சியில் ஒளிபரப்பப்பபட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2வது இடம் பெற்றவர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற மண்டானா, மாடலிங் செய்தபோது அதே பிரிவில் வேலை செய்து வந்த கௌரவ் குப்தா என்பவருடன் பழகினார்.
தனது வாழ்வில் நடந்த துயரங்கள் அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டார். இருவரும் காதல்வயப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர்.
மேலும் திருமணமான 6 மாதத்திலேயே மண்டானா-வை கொடுமைப்படுத்தி தாயார் வீ்ட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. எனவே மண்டானா தனது கணவர் மீது வன்கொடுமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனவும் மாதத்திற்கு 10 லட்ச ரூபாய் தனது தொழில் வளர்ச்சிக்காக வேண்டும் என்றும், 2 கோடி ரூபாய் எதிர்கால தேவைக்காக வேண்டும் எனவும் மண்டனா தனது மனுவில் கோரியுள்ளார்.
Comments
Post a Comment