உலக மக்கள் தொகை நாள்: காத்திருக்கும் சவால்கள்
இன்று உலக மக்கள்தொகை நாள், உலகளவில் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.கி.பி 1650-ம் ஆண்டுக்குப் பின்னர் தான் மக்கள் தொகை உலகளவில் அதிகரிக்க தொடங்கியது.
1840-ம் ஆண்டில் மக்கள்தொகை 100 கோடியாகவும், 1927-ம் ஆண்டில் 200 கோடியாகவும் உயர்ந்து, 1960-ம் ஆண்டில் 300 கோடியை அடைந்தது.
இப்படி சரசரவென அதிகரித்த உலக மக்கள் தொகையின் தற்போதைய எண்ணிக்கை 750 கோடியாகும்.
2024ல் இது 800 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2050-ம் ஆண்டில் 1,000 கோடியாக மக்கள் தொகை உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு விநாடிக்கு 2,582 விகிதமாகவும், ஒருநாளுக்கு 2,23,098 விகிதமாகவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேலும் மக்கள்தொகை அதிகரிப்பை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா மற்றும் வங்கதேசம் உள்ளன என மக்கள் தொகை தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சம் இருப்பது போல, 1200 கோடி அளவிலான மக்கள் தொகை அளவு வரை தான் பூமியானது தாங்கும் என சொல்லப்படுகிறது.
இதன் பிறகு மக்கள்தொகை அதிகரித்தால், அழிவுப் படிநிலையின் இறுதி நிலையை எட்டுவோம் எனக் கூறப்படுகிறது
இந்தப் பூமி தாங்கக்கூடிய அதிகபட்ச கார்பனின் அளவு ஒரு லட்சம் டன். ஆனால், இப்போதே கார்பனின் அளவு அரை லட்சம் டன்னைத் தாண்டிவிட்டது.
எனவே, 2200-ம் ஆண்டில் உலக அழிவு நிச்சயம் என ஆராய்ச்சியார்கள் பதறுகின்றனர்.
அது கார்பன் வெளியேற்றத்தினாலா அல்லது மக்கள் தொகையினாலா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
Comments
Post a Comment