ஒட்டுமொத்த ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்தது?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சேவையான ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலவச 4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்கியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சேவையான ஜியோ.
அதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி வந்தன.
இருப்பினும் ஜியோவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் சட்டவிரோதமாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ மொபைல் சேவையை பயன்படுத்தும் சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன திகதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் வட்டம் (பகுதி) உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் (data breach) இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இது குறித்து ஜியோ அளித்துள்ள விளக்கத்தில், "வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக, ஆதாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள், உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, சட்டத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியள்ளது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்