eBay இல் விற்பனையாகும் Moller M400 Skycar!

பறக்கும் கார் தொழில்நுட்பமானது முதன் முறையாக 2001 ஆம் ஆண்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
Moller M400 Skycar எனும் இக் காரினை Moller International எனும் விமான வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கியிருந்தது.
எனினும் இதனை பறக்கச் செய்வதற்கான அனுமதியை வழங்க FAA அமைப்பு மறுத்துவிட்டது.
இருந்தும் தற்போது eBay தளத்தின் ஊடாக இந்த பறக்கும் கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப தொகையாகக் கொண்டு ஏலம் விடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தி நேரடியாக கொள்வனவு செய்ய முடியும்.
இந்த விமானமானது எட்டு இயந்திரங்களை உள்ளடக்கியுள்ளதுடன் 720 குதிரை வலுவினைப் பிறப்பிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதனை உருவாக்கும் திட்டத்திற்கு சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்