iPhone 8 கைப்பேசிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 8 அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மூன்று பதிப்புக்களாக வெளியாகவுள்ள இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பிலான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
இவ்வாறிருக்கையில் இக் கைப்பேசியானது நான்கு வகையான வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை Benjamin Geskin என்பவர் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.
எனினும் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 7, 7 Plus ஆகிய கைப்பேசிகள் Jet Black, Black, Silver, Gold மற்றும் Rose Gold ஆகிய ஐந்து வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment