Motorola அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி

முன்னர் நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக கைப்பேசி வடிவமைப்பில் கொடிகட்டிப் பறந்த நிறுவனமாக Motorola இருந்தது.
அதன்பின்னர் குறித்த காலப் பகுதியில் மந்த கதியில் சென்றுகொண்டிருந்த நிறுவனம் தற்போது மீண்டும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது Moto X4 எனும் அட்டகாசமான வடிவமைப்பினைக் கொண்ட மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.
குறித்த கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution கொண்ட Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Qualcomm Snapdragon 630 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
Aliexpress INT

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கமெரா, 3,000 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி

கற்பழிப்பு என்பது பற்றிய பதிப்பு தவறாது படியுங்கள்

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்